வீதியில் கிடந்த மில்லியன்கணக்கான பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!

வீதியில் கிடந்த மில்லியன்கணக்கான பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 லட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது. இந்த பணத்தை அவதானித்த மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி முகாமைய...

இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 லட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது. இந்த பணத்தை அவதானித்த மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி முகாமையாளர் ஒருவர் அதனை வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, அஹங்கம பகுதியைச் சேர்ந்த சந்தன உதயங்க என்ற 38 வயதுடைய நபரே இந்தச் செயலைச் செய்துள்ளார். வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்.களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்பு செய்ய எடுத்துச் சென்ற 50 லட்சம் ரூபாய் பணம் தரையில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குவியலாக தரையில் விழுந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதுகாப்பு காவலர் ஊடாக வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நேர்மையான செயலை செய்த சந்தன உதயங்கவின் பெயர் விபரங்களை குறிப்பிட்ட வங்கி முகாமையாளர் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்