வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

வவுனியாவில் நகர பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி...

வவுனியாவில் நகர பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வித்தில் காயமடைந்த நிலையில் 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (25-11-2023) சம்பவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நகரில் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு நோக்கி சென்ற ஜீப் ரக வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்