வவுனியா வைத்தியசாலையில் ஒரு வருடத்தின் பின்னர் பதிவாகிய  கோவிட் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் ஒரு வருடத்தின் பின்னர் பதிவாகிய கோவிட் மரணம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த...

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (02) இரவு மரணமடைந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பதவியாவை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தார். வவுனியாவில் ஒரு வருடங்களிற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்