யாழ் விமான நிலையத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் கைது! வெளியான தகவல்

யாழ் விமான நிலையத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் கைது! வெளியான தகவல்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து பலாலி ஊடாக விமானம் மூலம் நாடு திரும்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் வாள்வெட்ட...

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து பலாலி ஊடாக விமானம் மூலம் நாடு திரும்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த முக்கிய நபர்களுள் 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் இன்று (03.11.2023) பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்