முல்லைத்தீவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்து

முல்லைத்தீவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்து

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பரந்தன் வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் உந்துருளியில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவ...

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பரந்தன் வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் உந்துருளியில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது (22.01.2023) நேற்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புத்தாண்டு விளையாட்டுப்போட்டியின் போது இடம்பெற்ற வாகன நெரிசல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து மோதி முன்னால் பயணித்த உந்துருளி மீது மோதியதில் உந்துருளியில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய இரண்டு வாகனங்களின் சாரதிகள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்