மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்க...

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வெட் வரியின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் மின்சார உற்பத்திக்கான டீசல் போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இதுவரையிலும் நாட்டு மக்களுக்கு பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்