போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் குருநாகல் - மதுராகொட பிரதேச ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம...

தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் குருநாகல் - மதுராகொட பிரதேச ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தி உள்ளனர். இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 4 மாணவர்களும் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.

பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்