பேருந்து 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்

பேருந்து 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பதுளை - மீகஹகிவுல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து 40 அடி பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளை - மீகஹகிவுல யோதஉல்பத பகுதியில் இன்று (20.10.2023) குறித்...

பதுளை - மீகஹகிவுல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து 40 அடி பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளை - மீகஹகிவுல யோதஉல்பத பகுதியில் இன்று (20.10.2023) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மீகஹகிவுல வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்