பிரித்தானியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுப்பொருள் ஒன்றில் நோய்க்கிருமிகள்: அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுப்பொருள் ஒன்றில் நோய்க்கிருமிகள்: அவசர எச்சரிக்கை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பிரித்தானியாவில் மயோனேஸ் என்னும் உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவை திரும்பப் பெறப்படுகின்றன. பிரித்தானியாவின் பட்ஜெட் பல்பொருள் அங்காடியான Lidl க...

பிரித்தானியாவில் மயோனேஸ் என்னும் உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவை திரும்பப் பெறப்படுகின்றன. பிரித்தானியாவின் பட்ஜெட் பல்பொருள் அங்காடியான Lidl கடைகளுக்கு, Potts Partnership Ltd என்னும் நிறுவனம் விநியோகிக்கும் மயோனேஸில் கிருமிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அதை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது. Potts’ Truffle Mayonnaise என்னும், 230g அளவுள்ள மயோனேஸ் பாக்கெட்களே திரும்பப் பெறப்படுகின்றன. 2024, ஜூலை best before திகதியும், 18823 என்னும் batch codeம் கொண்ட மயோனேஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட விவரங்கள் கொண்ட மயோனேஸை வாங்கியவர்கள், அதை உண்ணவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அதை அருகிலுள்ள Lidl கடையில் கொடுத்து அதற்காக செலுத்திய பணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மயோனேஸ், Listeria monocytogenes என்னும் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக காய்ச்சல், உடல் வலி, உடல் நடுக்கம், வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை Listeria பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்