பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் -  பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்...

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நேற்றைய தினமும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. அதேநேரம், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் பங்கேற்பதைத் தவிர்ப்பதாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது மேலும் 22 நாட்கள் தாமதமாகுவதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்