நடிகர் கமல்ஹாசனின் இலங்கை வருகை குறித்து வந்த தகவல்!

நடிகர் கமல்ஹாசனின் இலங்கை வருகை குறித்து வந்த தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்திய திரைப்பட நடிகர் உலகநாயகனும் , மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும்...

இந்திய திரைப்பட நடிகர் உலகநாயகனும் , மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும் ராணி துணைவியாரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் பிரிட்டிஷ் துணை உயர் ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில், தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரனும் பங்கேற்றார். இதன் போது கமல்ஹாசனை சந்தித்த துணை உயர்ஸ்தானிகர், எதிர்காலத்தில் இலங்கைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தாதவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் உலகநாயகன் இலங்கைக்கு வருவாரா இல்லையா என்பதை பொறுத்தே பார்க்க வேண்டும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்