த.தே.கூ கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

த.தே.கூ கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரான பொன்.செல்வராசா சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் (13-10-2023) மரணமடைந்துள்ளார். மட்டகளப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியில்...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரான பொன்.செல்வராசா சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் (13-10-2023) மரணமடைந்துள்ளார்.

மட்டகளப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியில் பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.

சமீப நாட்களாக நோய்வாய்ப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது, இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15-10-2023) பிற்பகல் 03 மணியளவில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்