காதல் கவிதை வரிகள் | 5 Best overall love quotes

காதல் கவிதை வரிகள் | 5 Best overall love quotes

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

காதல் கவிதைகள் வரிகள் உணர்வு என் வரிகளில் உள்ள வார்த்தைகளுக்கும் உணர்வுண்டென உணர்ந்தேன் நீ துடித்தபோது சற்றுநேரம் சற்றுநேரம் அனுமதி கொடு நம் இதயங்கள் சேர்ந...

காதல் கவிதைகள் வரிகள்

உணர்வு

என் வரிகளில் உள்ள

வார்த்தைகளுக்கும் உணர்வுண்டென

உணர்ந்தேன் நீ துடித்தபோது

சற்றுநேரம்

சற்றுநேரம் அனுமதி கொடு

நம் இதயங்கள் சேர்ந்து கட்டிய

காதல் மாளிகையை விடவா இது

அழகென்று பார்த்து விடுகிறேன்

சத்தமின்றி

சத்தமின்றி ஒரு முத்தம்

தினமும் உனக்கு நீயறியாமல்

கொடுத்து மகிழ்கிறேன்

மௌனமாய் மனதுக்குள்

உனது வருகையே

உனது வருகையே நிர்ணயிக்கும்

எனக்கான மணித்துளிகள்

உறைவதையும் உருகுவதையும்

ஊடல்

ஊடலின் விரிசலை

காதலில் நெய்கிறாய்

இருள்

இருளெனை சூழ்ந்து கொண்டாலும்

உன் நினைவொளியில்

வாழ்வேன் நானும்

அழகிய உலகில் உன்னோடு

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்