கருவளையம் நிரந்தரமாக மறையுமா? இதோ உங்களுக்கான எளிய வழி!

கருவளையம் நிரந்தரமாக மறையுமா? இதோ உங்களுக்கான எளிய வழி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உள்ளடக்க அட்டவணைகருவளையம் நிரந்தரமாக மறையுமா? இதோ உங்களுக்கான எளிய வழி!1. காபி மாஸ்க்2. பாதாம் எண்ணெய்3. பால் + பேக்கிங் சோடா4. வெள்ளரி மாஸ்க்5. அன்னாசி மாஸ்க்6. க்ரீன் டீ7. சரியா...

Best Ways to Get Rid of Dark Circles Under Eyes: Advice from an Esthetician  | Kim Gallo Esthetics

கருவளையம் நிரந்தரமாக மறையுமா? இதோ உங்களுக்கான எளிய வழி!

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. அந்தவகையில், ஒரே வாரத்தில் கருவளையத்தை நிரந்தரமாக நீங்க இதை மட்டும் செய்தால் போதும்.

1. காபி மாஸ்க்

காபி தூள் கண்களுக்குக் கீழே உள்ள கருமையை நீக்குவதற்குப் பயன்படுகிறது. இதனை வாரத்திற்கு 2-3 முறை பயனப்டுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றி தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் கழுவவும்

2. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கிறது மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

பாதாம் எண்ணெயுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் கண்களைச் சுற்றி தேய்த்து வந்தால் கருவளையம் நீங்கும்.

3. பால் + பேக்கிங் சோடா

பாலில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின் கண்களைச் சுற்றி தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது கருவளையத்தை நீக்கி கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

4. வெள்ளரி மாஸ்க்

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக வெட்டி அரை மணி நேரம் குளிரூட்டவும்.

பின் கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

5. அன்னாசி மாஸ்க்

அன்னாசி பழச்சாற்றுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.

இப்படி தினமும் இரண்டு வாரங்கள் செய்து வந்தால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் முற்றிலும் மறைந்துவிடும்.

6. க்ரீன் டீ

தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை 5-10 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின்னர் 10-15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால் கருவளையம் நீங்கி வீக்கம் குறையும்.

7. சரியான தூக்கம்

கருவளையங்களை போக்க முக்கியமானது சரியான தூக்கம் ஆகும்.

அதிக நேரம் மொபைல் பயன்படுத்தாமல் தூங்கினால் கருவளையம் மெல்ல மெல்ல குறைந்துவிடும். 

முக்கிய குறிப்பு

மேற்கண்ட வைத்தியங்கள் பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், நீங்கள் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டால், ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

கருவளையம் நிரந்தரமாக மறையுமா? என்பது பல காரணிகளைப் பொறுத்து இருக்கும். ஆனால், மேற்கண்ட வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் கருவளையத்தை கணிசமாக குறைக்கலாம்.   

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்