உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் த...

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பிலும் அதன் பின்னரான சர்ச்கைள் தொடர்பிலும் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்கு ஆதரவானது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னர் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்