உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெ...

எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். 2022 (2023) உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ம் திகதி முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்