இலங்கையில் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு...

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனம் ஒன்றின் மூலம் கணக்காய்வு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுயாதீன தணிக்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்