இந்தியாவில் தொடரும் கனமழை மற்றும் மின்னல்: 8 பேர் பரிதாபமாக மரணம்

இந்தியாவில் தொடரும் கனமழை மற்றும் மின்னல்: 8 பேர் பரிதாபமாக மரணம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்திய மாநிலம் ஜார்கண்டில் பெய்துவரும் கனமழை மற்றும் மின்னல் தாக்குவதாலும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர் கனமழை கடந்த சனிக்கிழமை முதல் ஜார்...

இந்திய மாநிலம் ஜார்கண்டில் பெய்துவரும் கனமழை மற்றும் மின்னல் தாக்குவதாலும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை கடந்த சனிக்கிழமை முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் சிறிய பாலங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் எனவும், மரங்களின் அடியில் நிற்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் விழுந்து பிரசாத் (எ) சோட்டு என்பவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரின் உடலானது இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கடந்த 24 மணிநேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்