இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நாபோலி நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளுடன் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது,