பலதரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும் இலங்கை ஒரு கடினமான பாதையை கடக்க வேண்டியுள்ளதாக மூடிஸ் எனலைட்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ் பொருளாதார நிபுணர் ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். மூடிஸ் எனலைட்டிக்ஸ், மதிப்பீடு முகவரகமானது, மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையிலிருந்து சுயாதீனமானதாகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கு அனுமதி அளித்தது. இந்த திட்டமானது 7 பில்லியன் டொலர்களை ஒட்டுமொத்த நிதியுதவியாக அணுக உதவும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. மூடிஸ் எனலைட்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறுகையில், "சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பானது வெளித்தோற்றத்தில் மாயாஜாலம் காட்டும் வெள்ளித் தோட்டாவாக (Silver bullet) இருக்காது. அரசாங்கத்திடமிருந்தும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காணாத வரையில் நிதிச் சந்தைகளில் வெளிப்படும் உற்சாகம் உண்மையில் மங்கியிருக்கும். எதிர்வரும் மாதங்களில் நாடு பெறும் அனைத்து மேலதிக நிதிகளும் நல்ல செய்திகளே, ஆனால் நிதி விவேகம் மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமாக இருக்கும்” என்று பொருளாதார நிபுணர் கூறினார். "இலங்கை மீது எவ்வளவு சாத்தியமான நிதி அல்லது ஆதரவு வீசப்பட்டாலும் அது இன்னும் கடினமான பாதையாகவே இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று கத்ரீனா எல் கூறினார்.
IMF பிணையெடுப்பு இலங்கைக்கு மாயாஜாலம் காட்டும் 'வெள்ளித் தோட்டா' அல்ல - மூடிஸ் எனலைட்டிக்ஸ்
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
பலதரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும் இலங்கை ஒரு கடினமான பாதையை கடக்க வேண்டியுள்ளதாக மூடிஸ் எனலைட்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ் பொருளாதார நி...