26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந...

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

மேலும் உணவருந்தியவர்களில் சுமார் 26 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்