விபத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து!

விபத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று(15.07.2023) கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ப...

இன்று(15.07.2023) கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தின் போது பதிவான சி.சி.ரி.வி காணொளி தற்போது வெளியாகியுள்ளது. பேருந்து செல்லும் திசைக்கு எதிரில் வந்த சிறிய ரக வாகனமொன்றில் மோதுவதை தடுப்பதற்கு பேருந்து சாரதி மேற்கொண்ட முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடைசாய்ந்துள்ளது. இதன்போது அங்கிருந்த மக்களின் உதவியுடன் பேருந்தில் பயணித்த பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்