வவுனியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியாலையில் அனுமதி!

வவுனியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியாலையில் அனுமதி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நேற்றிரவு (29.10-2023) 10.15 மணியளவில் வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளர் . இவ்விபத்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உ...

நேற்றிரவு (29.10-2023) 10.15 மணியளவில் வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளர் . இவ்விபத்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவையில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மின்சார சபையில் பணிபுரியும் ஊழியரொருவர் தனது வீட்டில் இருந்து பணி நிமித்தம் காரணமாக முல்லைத்தீவு செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கி நடந்து செல்கையில் அந்த திசையில் பயணித்த வான் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து இவர் மீது மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மெளபர் எனும் குடும்பஸ்தரே விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்