வருமான அனுமதிப்பத்திரம் பெறாதவர்களுக்கு சிக்கல்! - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

வருமான அனுமதிப்பத்திரம் பெறாதவர்களுக்கு சிக்கல்! - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கறுப்புப் பட்டியலில் 05 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களைசேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவ...

கறுப்புப் பட்டியலில் 05 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களைசேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் 6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைவாக, 05 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள் மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன் தகவல் அமைப்பில் இருந்து நீக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்