யாழில் இரவு நிகழ்ந்த பயங்கர விபத்து!

யாழில் இரவு நிகழ்ந்த பயங்கர விபத்து!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் - சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் சாவகச்சே...

இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் - சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் சாவகச்சேரி ஏ9 வீதி அரசடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவத்தில் இளைஞர் ஒருவரும், வயோதிபருமே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்