முல்லைத்தீவில் மீனவன் ஒருவரை கட்டிவைத்து கொடூரம்!

முல்லைத்தீவில் மீனவன் ஒருவரை கட்டிவைத்து கொடூரம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

மட்டக்களப்பை சேர்ந்த மீனவர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று முல்லைத்தீவில் நடந்துள்ளது. கருநாட்டுக்கேணியில் தென்னிலங்கையர் தொழிலில் பணியாற்...

மட்டக்களப்பை சேர்ந்த மீனவர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று முல்லைத்தீவில் நடந்துள்ளது.

கருநாட்டுக்கேணியில் தென்னிலங்கையர் தொழிலில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் வேலை செய்ய விருப்பம் இன்றி விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சிலர் அவரை விரட்டிபிடித்து தப்பிக்காது கொழுத்தும் வெயிலில் வலையினால் கட்டிபோட்டுள்ளனர்.

மீன்பிடி வேலை நெருக்கடியால் பலர் இடையில் விட்டு போனது காரணமாக வெளியேறிய இவரை கட்டிவைத்து கொடுமைப்படுத்தியதென அறியப்பட்டுள்ளது.

இதனை அறிந்த பிரதேச செயலாளர் பொலிசுக்கு தகவல் வழங்கியுள்ளார்.ஆனால்
அதற்கிடையில் வாடியின் உரிமையாளர் அம்மீனவனின் சொந்த ஊரான மட்டக்களப்புக்கு அழைத்து சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
வாடியின் உரிமையாளர் தென்னிலங்கையை சேர்ந்தவர் என்பதால் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்