போக்குவரத்து அமைச்சர் பதவி தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்த எச்சரிக்கை!

போக்குவரத்து அமைச்சர் பதவி தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்த எச்சரிக்கை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் பஸ் உதிரி பாகங்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளமை தொடர்பில் விசாரணை நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில் விசேட குழு ஒன்றை நியமித்து அமைச்சர் அதனைச் செய்ய முடியும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவால் (Bandula Gunawardane) தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் எனவும் வேறு ஒருவரை நியமித்து பிரச்சினைகளை ஆராய வேண்டும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்