பிரான்சில் வலுக்கும் போராட்டம் - இயல்பு நிலையை இழந்த நாடு!

பிரான்சில் வலுக்கும் போராட்டம் - இயல்பு நிலையை இழந்த நாடு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பிரான்ஸ் அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பாரிஸ் நகரில் திரண்ட லட்சக்...

பிரான்ஸ் அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பாரிஸ் நகரில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் நடனம் ஆடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போராட்டம் களம் போர்க்களமாக மாறியது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாண்வர்கள், அரசு பணியாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். நாடு முழுவதும் வெடித்தெழுந்த போராட்டத்தால் ஓய்வூதிய சீர்திருத்த கொள்கையை நிறுத்தி வைக்க அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 62ஆக உள்ளது.

இதனை 64ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் முயற்சித்து வருகிறார்.

இந்த மாத ஆரம்பத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின் படி 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்தே நாடுதழுவிய நிலையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்