பாடசாலை மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

பாடசாலை மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் ப...

பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை இல்லாது செய்வதா? அல்லது தொடர்வதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்