தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்து; 24 மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்

தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்து; 24 மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்தனர்....

மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

பேர் காயமடைந்தவர்கள் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்