தற்காலிகமாக மூடப்பட்ட தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி

தற்காலிகமாக மூடப்பட்ட தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூடப்பட்ட தூதரகங்களே இவ்வாறு திறக்கப்படவ...

தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூடப்பட்ட தூதரகங்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

இதன்படி, சைப்ரஷ் , நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், ஈராக், பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகிய தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தூதரகங்களை மீளத் திறப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்