ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று(07.11.2023) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது என்று அறியமுடிந்தது.