ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்!

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்த வருடத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.குறித்த தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரி...

இந்த வருடத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.குறித்த தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலம் நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ஒருவருக்கு அத்தகைய அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறான சூழலில் அது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்ய நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லும் அதிகாரத்தை வழங்கும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்