சனாதனத்தைப் பற்றிய உதயநிதியின் கருத்துக்கு  கமல்ஹாசன் ஆதரவு!

சனாதனத்தைப் பற்றிய உதயநிதியின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

சனாதனத்தைப் பற்றிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களுக்கு உரிமை உண்டு என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு...

சனாதனத்தைப் பற்றிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களுக்கு உரிமை உண்டு என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், "உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடும் திறன் ஆகும். சரியான கேள்விகளைக் கேட்பது, முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்தது மற்றும் சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது. ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும். உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்