உங்கள் அழகை மெருகூட்டும் மாதுளம்பழத்தின் 13 பிரமாதப் பலன்கள் | 13 Amazing Benefits of Pomegranate to Polish Your Beauty

உங்கள் அழகை மெருகூட்டும் மாதுளம்பழத்தின் 13 பிரமாதப் பலன்கள் | 13 Amazing Benefits of Pomegranate to Polish Your Beauty

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உங்கள் அழகை மெருகூட்டும் மாதுளம்பழத்தின் 14 பிரமாதப் பலன்கள்மாதுளையில் உள்ள சத்துக்கள்மாதுளம்பழத்தை எவ்வாறு உட்கொள்ளலாம்மாதுளம்பழத்தின் 14 பிரமாதப் பலன்கள்குறிப்பு உங்கள் அ...

உங்கள் அழகை மெருகூட்டும் மாதுளம்பழத்தின் 14 பிரமாதப் பலன்கள்

மாதுளம்பழம் சீனாவில் "சீனீஸ் ஆப்பிள்" என்று அழைக்கப்படுகிறது.பழங்களில் மிகவும் பழமையான மற்றும் சிறந்த பழம் மாதுளம்பழம் ஆகும். உலகெங்கிலும் 720 வகையான மாதுளைகள் உள்ளன.நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டால், உடல்நலம் தேறும்.மருத்துவ குணங்களும் அழகு குணங்களும் கொண்டது.பிளேக், புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டது.

மாதுளையில் உள்ள சத்துக்கள்

  • வைட்டமின்கள் A, C, E மற்றும் K
  • நார்ச்சத்து
  • பொட்டாசியம்
  • இரும்பு
  • மெக்னீசியம்
  • ஃபோலிக் அமிலம்

மாதுளம்பழத்தை எவ்வாறு உட்கொள்ளலாம்

  • பழத்தை நேரடியாக சாப்பிடலாம்.
  • ஜூஸாக தயாரித்து குடிக்கலாம்.
  • சாலடுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • மில்க் ஷேக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

மாதுளம்பழத்தின் 14 பிரமாதப் பலன்கள்

1. மன அழுத்தத்தை குறைக்கிறது:

உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) அளவு குறைவதால் மன அழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

2. உடற்பயிற்சிக்கு உதவுகிறது:

உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளை சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

3. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

4. காயங்களை குணமாக்குகிறது:

மாதுளம் விதைகள் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாக்கும் சக்திகொண்டவை.

5. முடி வளர்ச்சியை தூண்டுகிறது:

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, முடி வளர்ச்சியை தூண்டும்.

6. ஞாபகசக்தியை அதிகரிக்கிறது:

தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையை சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

7. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது:

வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான ஆன்டி ஏஜிங் சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது.

8. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது:

கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

9. எடை இழப்பை ஊக்குவிக்கிறது:

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை கொண்டது. செரிமானப் பிரச்னைகளை சீராக்கி, உடல் எடை குறைவதற்கும் துணைபுரியும்.

10. கருவுறுதலை மேம்படுத்துகிறது:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவர கருவுறுதலில் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு கருவுறுதலை மேம்படுத்தும்.

11. மெனோபாஸ் காலத்தை எளிதாக்குகிறது:

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். மாதுளம்பழ ஜூஸ் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டி எலும்புகள் வலுப்பெற உதவும்.

12. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.

13. பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது:

மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று

குறிப்பு

  • மாதுளம்பழத்தை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.நீரிழிவு நோயாளிகள் மாதுளம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்