இலங்கையில் கால்பதிக்கும் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம்!

இலங்கையில் கால்பதிக்கும் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் அவுஸ்திரேலியா நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" நிறுவனமே இல...

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் அவுஸ்திரேலியா நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" நிறுவனமே இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், கடந்த 22ம் திகதி அந்த நிறுவனத்துக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் புதிய நிறுவனத்துக்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் புதிதாக நிறுவப்பட உள்ளன.

அதேசமௌயம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக "யுனைடெட் பெட்ரோலியம் லங்கா லிமிட்டெட்" என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்