அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம்
கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது வரவு செலவு திட்டத்தில் பிரதிபலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் இதன் மூலம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.