அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி அறிவிப்பு!

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிட்டினமாலுவ...

அரச ஊழியர்களின் சம்பளம் இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சிட்டினமாலுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருட இறுதிக்கு முன்னர் இன்னும் ஓரிரு சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலையும் குறையலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களின் விலை குறைவதையே எதிர்பார்க்கின்றனர் மாறாக அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஊழலுக்கு எதிரான சட்டமூலம் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்